கேப்சிகம் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - ஒன்று பெரிய

வெங்காயம் - ஒன்று ( பொடியாக நறுக்கியது )

தக்காளி - ஒன்று ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி - ஒரு பூண்டின் அளவு ( பொடியாக நறுக்கியது )

பூண்டு - 5 பற்கள் ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் - 6

எலுமிச்சை - பாதி

கார்ன் மற்றும் பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி

புதியா, மல்லித் தழை, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

சாம்பார்த்தூள் - ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவைக்கு

செய்முறை:

பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

முதலில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளி மற்றும் தழைகளை சேர்த்து நன்கு குழையும்படி வதக்கி சிறிது உப்பு சேர்க்கவும்.

பின் குடைமிளகாய், கார்ன் மற்றும் பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் கழித்து சாம்பார்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

வடித்த சாதத்தை சேர்த்து கிளறவும். அதில் தேவைக்கு ஏற்றாற் போல எலுமிச்சை சாற்றை பிழிந்து கிளறிக் கொள்ளவும்.

காரசாரமான சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி.

குறிப்புகள்: