கூட்டாஞ்சோறு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 4 கப்

துவரன் பருப்பு - 1 கப்

புளி - பெருநெல்லி அளவு.

---------------------------

காய்கறி:

-------------------------------

முருங்கை - 2

சேனை - 150 கிராம்

சீனி அவரை - 100 கிராம்

அவரை - 100 கிராம்

காரட் - 100 கிராம்

உருளை - 50 கிராம்

மாங்காய் - 1

கத்தரி - 100 கிராம்

வாழைக்காய் - 1

------------------------------------

தாளிக்க :

----------------------------------

கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - ஒரு மேசைக்கரண்டி

வெங்காய வடகம் - 4

முருங்கை கீரை - ஒரு கொத்து

நல்லெண்ணெய் - தேவையான அளவு

-----------------------------

அரைக்க :

-----------------------------

தேங்காய் - அரை மூடி

சின்ன வெங்காயம் - 6

பூண்டு - 5 பல்

சீரகம் - 1 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

குக்கரில் அல்லது ஒரு அடி கனமான பாத்திரத்தில் துவரம் பருப்பை 3 கப் தண்ணீர் விட்டு மூடாமல் பருப்பு மலரும் வரை வேக விடவும்.

முருங்கை, சேனை, சீனி அவரையை முதலிலே போட்டு விடவும்

பின்னர் அரிசியை கழுவி அதில் போட்டு ஒரு கொதி வேக விடவும்.

புளியை கரைத்து விடவும்.

மிச்சமுள்ள காய்கறிகள் மற்றும் அரைத்த கலவையை போட்டு சிறிது பெருங்காயம் சேர்த்து நன்றாக கிண்டி (உப்பு, உறைப்பு சரிபார்க்கவும்) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து சுமார் 15 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, வடகம், கருவேப்பில்லை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டவும்.

முருங்கைக்கீரையை சிறிது எண்ணெயில் வதக்கி சாதத்துடன் கலந்து சூட்டுடன் மூடி வைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து நன்றாக கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்:

நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து அப்பளம் தொட்டு சாப்பிடலாம்.