கூட்டாஞ்சோறு (3)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
கத்தரிக்காய் - ஒன்று
வாழைக்காய் - 3 " துண்டு
முருங்கைக்காய் - 3 துண்டு
கொத்தவரங்காய் - 5
சேனை (YAM) - 100 கிராம்
வெள்ளரிக்காய் - 100 கிராம்
காரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி
-----------------------------------------------
அரைக்க: 1:
------------------------------------------
வத்தல் மிளகாய் - 7
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 7
--------------------------------------
அரைக்க 2:
-----------------------------------
தேங்காய் - ஒரு மூடி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
------------------------------
தாளிக்க:
-------------------------------
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வர மிளகாய் - 2
செய்முறை:
காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கி வைத்துக் கொள்ளாவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
மிக்ஸியில் வெங்காயம், மிளகு, வர மிளகாயை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் சீரகத்தை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளை போட்டு இரண்டு முறை கிண்டி விட்டு அரைத்து வைத்திருக்கும் வெங்காய, வரமிளகாய் அரைப்பை போட்டு ஒரு கொதி விடவும்.
அரிசி பருப்பை கழுவி குக்கரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் காய்கறிகளை போட்டு தேவைக்கு உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கீரையை போடவும். கீரை வதங்கியவுடன் தேங்காய் அரைப்பை போட்டு கிளறவும். குக்கரில் ஸ்டீம் போனவுடன் திறந்து தாளித்து வைத்திருக்கும் கீரையை போட்டு கிளறவும்.
கீரையை சேர்த்த பின்னர் பத்து நிமிடம் மிக குறைந்த தீயில் குக்கரை மூடி வெயிட் போடாமல் வைக்கவும்.
சுவையான சத்தான கூட்டாஞ்சோறு ரெடி.