கூட்டாஞ்சோறு (2)
தேவையான பொருட்கள்:
கொத்தவரங்காய் - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
மாங்காய் - கால் பாகம்
சின்ன வெங்காயம் - 15
காராகருணை - 100 கிராம்
அவரைக்காய் - 50 கிராம்
துவரம் பருப்பு - 300 கிராம்
அரிசி - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
வாழைக்காய் - 2
கத்திரிக்காய் - 3
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - கால் கப் + 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
பூண்டு - 7
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் ஸ்லைசாக நறுக்கவும். கொத்தவரங்காய்
அவரைக்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காராகருணையை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். மாங்காயை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம்
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், பூண்டு, சீரகம் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அது கொதித்ததும் பருப்பை களைந்து போடவும். அரிசியையும் களைந்து போடவும். அதனுடன் நறுக்கின காராகருணையை போடவும். அதில் மஞ்சள் தூள் போட்டு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அலசி விட்டு போடவும்.
அதனுடனே நறுக்கின வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை இரண்டாக கீறி போடவும்.
புளியை 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் மிளகாய் தூள், உப்பு, அரைத்த தேங்காய் விழுதை போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதை குக்கரில் இருக்கும் காய்கறி கலவையில் ஊற்றவும். மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி ஊற்றவும். எல்லாவற்றையும் நன்கு ஒன்றாக கலந்து விடவும்.
மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 20 நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் குக்கரை திறந்து சாதத்தை நன்கு ஒரு முறை கிளறி விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்தை வெந்த சாதத்துடன் கொட்டி நன்கு கிளறி விடவும்.
சுவையான கூட்டாஞ்சோறு சாதம் தயார்.