கூட்டாஞ்சோறு
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் வேக வைத்த
துவரம் பருப்பு - அரை கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
காரட் - ஒன்று
பீன்ஸ் - 15 சிறிய
முள்ளங்கி - 6
காலிஃப்ளவர் - கால் பகுதி
கத்தரிக்காய் - 2
முளைக்கட்டிய பச்சைபட்டாணி, லீமா பீன்ஸ் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - தேவைக்கு
பூண்டு - 3
----------------------------------
அரைக்க :
-------------------------------------
தேங்காய் - அரை மூடி
சின்ன வெங்காயம் - 2
சீரகம், மிளகு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
----------------------
தாளிக்க :
------------------------
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம் ,வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகள் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்.
பருப்பை நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து மசிக்கவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்கறிகளையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும். பிறகு குக்கரில் அரிசி புளிக் கரைசல், பருப்பு, காய்கறி, அரிசி, உப்பு, சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்.
நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். கடைசியாக ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
சுவையான கூட்டாஞ்சோறு தயார்.