குஸ்கா (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பட்டை, கிராம்பு

பூண்டு - 10 பல்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 4

எண்ணெய் - தாளிப்பதற்கு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

கடலைப்பருப்பு - 75 கிராம்

தக்காளி - 3

செய்முறை:

இஞ்சி, பூண்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, கொத்தமல்லி வதக்கி அதில் கடலைப்பருப்பு, அரிசி போட்டு தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு 2 விசில் விடவும்.

குறிப்புகள்: