குஸ்கா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பட்டை - 6 துண்டு

கிராம்பு - 20

ஏலக்காய் - 15

இலை - 2

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

கொத்தமல்லி - 2 கொத்து

புதினா - 2 கொத்து

தேங்காய் பால் - 3 கப்

உப்பு - ஒரு மேசைக்கரண்டி

நெய் - 100 கிராம்

தயிர் - அரை கப்

மீல் மேக்கர் - 25 கிராம்

எலுமிச்சை - ஒரு மூடி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி

பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தயிருடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம், ஏலக்காய் விழுது சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இலையை போட்டு தாளித்து பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்m புதினா, கொத்தமல்லி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

பிறகு தயிர் கலவையை ஊற்றி 2 நிமிடம் நன்கு கிளறி உப்பு போடவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல்மேக்கரை போட்டு 3 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். உப்பு போட்டு கிளறிய பிறகு 3 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீல் மேக்கரை போட்டு கிளறி விடவும்.

கொதித்து பொங்கும் போது ஊற வைத்த அரிசியை போட்டு அவ்வபோது கிளறி விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்.

10 நிமிடம் கழித்து அரிசி முக்கால் பதம் வெந்ததும் மேலே எலுமிச்சை சாற்றைப் பிழிந்து கிளறிவிட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.

பிறகு 8 நிமிடம் கழித்து இறக்கி மேலே கொத்தமல்லித் தழை தூவி கிளறி விடவும்.

குறிப்புகள்:

இதை உருளைக்கிழங்கு குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.