குஸ்கா (1)
தேவையான பொருட்கள்:
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - ஒரு கைப்பிடி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 காரத்திற்கேற்ப
புதினா - 10 இலைகள் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒரு சின்ன பழம்
கெட்டியான தயிர் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை - அரை பழம் (சிறியது)
நெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
எண்ணெய் - ஒரு பெரிய ஸ்பூன் அளவு
உப்பு - தேவையான அளவு
பாசுமதி அரிசி - அரை கிலோ அல்லது 2 கப்
தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு 1 3 /4 கப் தண்ணீர் (இங்கே கொடுத்துள்ள அளவுக்கு 3 1 /2 கப் தண்ணீர் சேர்க்கவும்)
செய்முறை:
வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அரிசியை தண்ணீரில் களைந்து ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு சூடேறியதும் பட், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடிப்பிடிக்காமல் கிளறவும். பிறகு பச்சை மிளகாய்
புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஒரு முறை வதக்கிய பின் நறுக்கின தக்காளி மற்றும் தயிர் சேர்த்து கிளறவும். தக்காளியை மசிய வதக்கக் கூடாது. வதக்கிய பொருட்களிலிருந்து எண்ணெய் பிரிய தொடங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு எலுமிச்சைச்சாறு
உப்பு மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது மூடி வைத்தால் சீக்கிரம் தண்ணீர் வற்றி விடும். கரண்டியால் கிளறும் போது தண்ணீர் அதிகம் இல்லாமல் குறைவாக இருந்தால் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பிறகு அந்த பாத்திரத்தின் மேல் அலுமினியம் பாயில் அல்லது நியூஸ் பேப்பரை வைத்து மேலே பாத்திரத்துக்கு தகுந்தாற்போல் தட்டு வைக்கவும். அதன் மேல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கவும்
5 நிமிடம் கழித்து கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி
முன்பு மூடி வைத்தது போல் வைத்து 5 நிமிடம் தம்மில் விடவும். பிறகு மீண்டும் கவனமாக அலுமினியம் பாயிலை எடுத்து சாதத்தை அடியிலிருந்து கிளறாமல் மேலாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
குறிப்புகள்:
குஸ்கா கொஞ்சம் மைல்டாக இருப்பதால் தாளிச்சா ஏதாவது ஒரு கிரேவி அல்லது மட்டன் அல்லது சிக்கன் குருமாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். வேண்டுமானால் முந்திரியை நெய்யில் வறுத்து இறுதியில் சேர்க்கலாம்.
நெய் இன்னும் அதிகமாக விரும்புவோர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.