குஸ்கா ரைஸ்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 3 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (சிறியது)
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
புதினா - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி
-----------------------------------
தாளிக்க:
---------------------------------------
நெய் - 3 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிது
வெந்தயம் - துளி
செய்முறை:
வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியைப் பொடியாகவும் பச்சை மிளகாயை இரண்டாகவும் நறுக்கி வைக்கவும்
குக்கரில் நெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் 2 கப் அரிசிக்கு 4 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசி, தக்காளிm மல்லித் தழைm புதினாm உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தம்மில் போடவும்
வெஜ் தாளிச்சா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவியுடன் சாப்பிடலாம்.