குஸ்கா
தேவையான பொருட்கள்:
சீரகசம்பா அரிசி - 4 டம்ளர்
டால்டா - 1 ஸ்பூன்
தேங்காய் என்ணெய் - 2 மேசை கரண்டி
நெய் - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4
வாசனை பொடி - 1/2 ஸ்பூன் (பட்டை,ஏலக்காய்,கிராம்பு)
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காய விழுது - 1/4 கப்
தக்காளி - 8
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தயிர் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 5 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - 2
கலர் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பாத்திரத்தில் மூன்று எண்ணெய்களையும் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
பின்னர் வாசனை தூள், புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பின்னர் சின்ன வெங்காய விழுது,தக்காளி, மிளகாய் தூள், தயிர், சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
பின் 1 டம்ளருக்கு 2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
பின் அரிசியை சேர்த்து லேசாக தண்ணீர் இருக்கும் வரையில் தீயில் வைக்கவும்
நீர் வற்ற ஆரம்பிக்கும் தருவாயில் எலுமிச்சை சாறு ஊற்றி மீண்டும் எல்லா பக்கமும் படும் படி கிளறவும்.
பின் கலர்பொடியை நீரில் கரைத்து மேலாக ஊற்றி விட்டு கலக்காமல் அப்படியே மூடி தம்மில் போடவும்
குறிப்புகள்:
தாளீச்சா, சிக்கன் அல்லது மட்டன் சாப்ஸ் உடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்