குழந்தையின் முதல் உணவு
0
தேவையான பொருட்கள்:
பொட்டுகடலை - மூன்று மேசைக்கரண்டி
அரிசி - ஒன்றரை மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகு - மூன்று
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வறுத்து பொடித்து கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரை உப்பு ஒரு பின்ச் போட்டு கொதிக்க வைத்து இந்த பொடியை ஒரு மேசைக்கரண்டி போட்டு கிளறிக் கொண்டே இருங்கள். கெட்டி ஆனதும் ஒரு சொட்டு நெய் விட்டு இறக்கி உங்கள் செல்ல குழந்தைக்கு இதை முதல் முதல் ஆரம்பியுங்கள்.
செரிலாக் மாதிரி கொடுக்கலாம்.பிறகு கொஞ்ச கொஞ்சமாக உருளை, கேரட் வேக வைத்து சேர்த்து கொள்ளுங்கள்.
குறிப்புகள்:
பல் முளைக்கும் போது, நடக்கும் போது பேதியாகும் அதை தடுக்க பொட்டு கடலை கட்டுபடுத்தும். சோம்பு செரிக்க வைக்கும்.