குடைமிளகாய் சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - 3 சிறியது (சிகப்பு, மஞ்சள், பச்சை)

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4

தனியா - 1 தேக்கரண்டி

வேர்க்கடலை - 3 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - 1/4 கப்

சாதம் - 2 கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும். கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய குடைமிளகாய் சேர்த்து வதக்கும். 3 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் மசாலா பொடியாக சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி சாதத்துடன் கலந்து ரைதாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: