கீரை சாதம் (குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கப்

ஸ்பினாச் - 1/2 கட்டு

வெங்காயம் - 1/2

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறிது

கரம் மசாலா தூள் - 1/4 அல்லது 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஸ்பினாச் பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

குழைய வரவில்லை என்றால் ப்லென்டரில் லேசாக அடித்து வைக்கவும். (கீரை வேக வைத்த தண்ணீரிலேயே செய்யவும்)

அரிசியை 3/4 கப் தண்ணீர் ஊற்றி 3/4 பங்கு வேக வைக்கவும்.

வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் மூன்றையும் ப்லென்டரில் போட்டு அடிக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காய மசாலா, கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக வதக்கவும்.

இதை கீரையில் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி விடவும்.

பின் 3/4 வெந்த சாதம் சேர்த்து மூடி நன்றாக சாதம் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

இது சத்தானது. கூடவே வெங்காயம் பூண்டு அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் எடுத்து விட மாட்டார்கள்.

கீரை சேர்த்து சாதம் வேக வைப்பதால் ருசியாக இருக்கும். விரும்பினால் இதில் பொடியாக நறுக்கிய கேரட் கூட சேர்க்கலாம்.