கீரை சாதம்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - இரண்டு கப்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சைமிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (பெரியது)
புதினா இலை - அரை கப்
கொத்தமல்லி இலை - அரை கப்
கீரை - இரண்டு கப்
ஜாதிக்காய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - பாதி
எண்ணெய் - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பாசுமதி அரிசியை தனியாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளமாக அரிந்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சைமிளகாயை போடவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி, புதினா இலை, கொத்தமல்லி இலை, கீரை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
ஜாதிகாய்த்தூள், கரம் மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு மூன்று கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு கிளறிவிட்டு மூடிபோட்டு விசில் போடவும்.
ஒரு விசில் வந்தவுடன் அடுப்பின் அணலை குறைத்து விட்டு 15 நிமிடம் வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு, விசில் எடுக்க வந்தவுடன், மூடியை எடுத்து, எலுமிச்சையை பிழிந்து கிளறிவிட்டு மூடவும்.