கீரை ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - இரண்டு கோப்பை

பிடித்தமான கீரை - இரண்டு பெரிய கட்டு

புளிச்சகீரை - ஒரு கட்டு

கொத்தமல்லி - ஒரு கட்டு

வெங்காயத்தாள் - கால் கோப்பை

பெரிய வெங்காயம் - இரண்டு

பூண்டு - நான்கு பற்கள்

பச்சைமிளகாய் - ஆறு

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி

எண்ணெய் அல்லது நெய் - கால் கோப்பை

உப்புத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை கழுவி உப்பு கலந்த கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து வடித்துக் கொள்ளவும். பிறகு அதை நன்கு ஆறவைக்கவும்.

கீரையை ஆய்ந்து நன்கு கழுவி நீரை வடித்து விட்டு நறுக்கி வைக்கவும்.

புளிச்ச கீரையின் இலைகளை கிள்ளி எடுத்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.

வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு பொரியவிடவும்.

பிறகு வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வறுக்கவும். பிறகு கீரைகளை சிறிது சிறிதாக கொட்டி வதக்கவும்.

கீரை நன்கு வதங்கியவுடன் ஆறவைத்த சோற்றைக் கொட்டி கலக்கவும். சோறு நன்கு சூடானவுடன் உப்புத்தூள், மிளகுத்தூளைப் போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாளை கொட்டி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.

வெஜிடபிள் குருமாவுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: