கீமா ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - கால் கிலோ
மட்டன் கீமா - 100 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை - தலா ஒன்று
லவங்கம் - பாதி
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
வெங்காயத் தண்டு - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கப்
மேகி மட்டன் ஸ்டாக் - ஒரு க்யூப்
கரம் மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
எண்ணெய், நெய் - தலா 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
தேவையானவற்றை எடுத்து வைக்கவும். வெங்காயம்
தக்காளியை நறுக்கி வைக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம், ரம்பை இலை, லவங்கம், நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தண்டு போட்டு வதக்கவும்.
பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது, மட்டன் ஸ்டாக் போட்டு வதக்கவும். தக்காளி, மட்டன் கீமா, தூள் வகைகளை எல்லாம் போட்டு கிளறி விடவும்.
அதன் பிறகு தயிர், எலுமிச்சை சாறு, மல்லி தழை, உப்பு சேர்த்து வேக விடவும்.
பின் அரிசியை கழுவி கீமா குருமாவில் போட்டு
ஒன்றிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு 2 விசில் வேக விடவும்.
குறிப்புகள்:
மட்டன் ஸ்டாக் சேர்க்காமலும் செய்யலாம்.