கிரீன் ரைஸ்
தேவையான பொருட்கள்:
கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி - இரண்டு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி (தேவைப்பட்டால்)
பீன்ஸ் - ஒரு கப்
பச்சை பட்டாணி - அரை கப் (தேவைப்பட்டால்)
பெருங்காயம் - இரண்டு பின்ச்
மிளகாய் வற்றல் - மூன்று
சாதம் - ஒன்றரை கப் (அல்லது) இரண்டு கப்
கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை. கறிவேப்பிலை, முந்திரி - தாளிப்பதற்கு:
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொத்தமல்லி, கீரை, புதினா, உப்பு போட்டு நன்கு வேக விடவும்.
அடுப்பில் இன்னொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக விடவும்.
கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.
ஒரு கடையில் சிறிது ஆயில் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம், பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.
இரண்டு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.