கிம் பாப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரோஸ்டட் லேவர் கிம் - 1

கேரட் - 1

வெள்ளரி - 1

முட்டை - 1

கிம்பாப் முள்ளங்கி - 1

சாதம் - 2 கைப்பிடி

மிளகுதூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கேரட், வெள்ளரி இவைகளை கழுவி விட்டு மெல்லியதாக நீள வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து ஆம்லெட் போட்டு அதையும் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். (ஆம்லெட் வெறும் ப்ளைன் தான். வெங்காயம், மிளகாய் இவை எதுவும் தேவையில்லை).

சாதத்தில் மிளகுதூள் மற்றும் தேவையான அளவு உப்பு இவைகளை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.

இப்பொழுது கிம்பாப் செய்ய தேவையான பொருட்கள் தயாராகிவிட்டன.

கிம்மை ஒரு சமமான பலகை (சாப்பாத்தி போடும்/காய் நறுக்கும் பலகை)வைத்து அதன்மேல் சாதத்தை மிக மெல்லியதாக பரப்பவும். கிம்மின் முக்கால் பாகம் வரை பரப்பினால் போதுமானது.

பின் சாதத்தின்மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கேரட், வெள்ளரி, முட்டை, முள்ளங்கி இவைகளையும் அடுக்கவும்.

இப்பொழுது கிம்மை மேல் நோக்கி சிறிதளவு மட்டும் அழுத்தம் கொடுத்து உருட்டவும்.

இப்பொழுது கிம் ரோல் தயாராகி விட்டது. கிம் ரோலை கத்தி கொண்டு குறுக்கில் வெட்டவும். சுவையான கிம்பாப் ரெடி.

குறிப்புகள்: