கிட்ஸ் கேப்ஸிகேரட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்

பொடியாக நறுக்கின குடைமிளகாய் - அரை கப்

பொடியாக நறுக்கின கேரட் - அரை கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

தனியாத்தூள் - அரை தேக்கரண்டி

சீரகத்தூள் - கால் தேக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

--------------------

வறுத்து பொடிக்க:

----------------------

வேர்கடலை - ஒரு கைப்பிடி

கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

மிளகாய் - ஒன்று(விருப்பப்பட்டால்)

கடுகு - தாளிக்க

செய்முறை:

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட் நான்கையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கின கேரட்டை ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

அதே போல் நறுக்கின குடைமிளகாயை ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வேர்கடலையை போட்டு வறுக்கவும். ஓரளவு வறுபட்டதும் அதனுடன் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு

மிளகாயை போட்டு வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு வேக வைத்த காய்களை போட்டு உப்பு சேர்த்து வதக்கி விட்டு அதில் வடித்த சாதத்தை கொட்டி மென்மையாக கிளறவும்.

கடைசியாக பொடியை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.

குறிப்புகள்:

பச்சைபட்டாணி சேர்க்கலாம். கோவைக்காயிலும் இதே போல் செய்யலாம்.கோவைக்காய் என்றால் அவனில் அதிக நேரம் வேக வைக்க வேண்டும்.