கிச்சிடி (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
பச்சபருப்பு - ஒரு தேக்கரண்டி (வறுத்தது)
உருளைக்கிழங்கு - ஒரு கிழங்கு நாலில் ஒரு பாகம்
கேரட் - கால் துண்டு
சிக்கன் - சிறிய துண்டு (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
உப்பு - ஒரு பின்ச்
நெய் - ஒரு சொட்டு
மிளகு தூள் - ஒரு பின்ச் ( மூன்று முழு மிளகு)
சீரகம் - ஆறு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு பின்ச்
சோம்பு - இரண்டு, மூன்று
செய்முறை:
முதலில் அரிசி பருப்பு இரண்டையும் ஊறவைக்கவும். ஊறவைத்ததில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நெய்யும், அரை டம்ளர் தண்ணீரும் குக்கரில் அடியில் தண்ணீர் வைத்து ஒரு சில்வர் டப்பாவில் வைத்து வேகவிடவும். மூன்று விசில் வந்தால் போதும்.
ஆவி அடங்கி வெளியே பத்திரமாக பார்த்து எடுக்கவும் இல்லை என்றால் கையில் காலில் கொட்டிக்கொள்வீர்கள். சூட்டுடன் பெரிய கரண்டி கொண்டு மசித்து விட்டால் மிக்ஸியில் அரைத்தது போல் இருக்கும்.
குறிப்புகள்:
காரம் வேண்டாம் என்றால் முழு மிளகு சேர்த்து கொண்டு வெந்ததும் அதிலிருந்து எடுத்து விடவேண்டும்.