காளான் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ

காளான் - அரை கிலோ

வெங்காயம் - 3

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 2

இஞ்சிபூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி

தயிர் - ஒன்றரை கப்

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி

வெள்ளை மிளகுத் தூள் - சிறிது

பன்னீர் - ஒரு மேசைக்கரண்டி

எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி

புதினா, மல்லித் தழை - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

--------------

பொடிக்க:

-------------------

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

அன்னாசிப்பூ - சிறிது

சாஜிரா - கால் தேக்கரண்டி

சோம்பு - கால் தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

காளானை டிஷ்யூ பேப்பரால் நன்கு துடைத்துவிட்டு நறுக்கி வைக்கவும். வெங்காயம்

தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும்.

பொடிக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள் மற்றும் பொடித்த பொடியைச் சேர்க்கவும். பிறகு கரம் மசாலாத் தூள் மற்றும் வெள்ளை மிளகுத் தூள் சேர்க்கவும்.

அதனுடன் தக்காளி, புதினா, மல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கவும்.

பிறகு நறுக்கிய காளானைச் சேர்த்துக் கிளறவும்.

நன்றாகக் கிளறிய பிறகு தயிர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

பிறகு பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் சிம்மில் வேகவிட்டு இறக்கவும்.

குறிப்புகள்: