காளான் புலவு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 7 கப்

காளான் - 1 கிலோ

இஞ்சி விழுது - 75 கிராம்

பூண்டு விழுது - 75 கிராம்

பச்சை மிளகாய் விழுது - 50 கிராம்

வெங்காயம் - அரை கிலோ

நெய் - கால் கிலோ

பொடியாக அரிந்த கொத்தமல்லி - 2 கப்

தயிர் - கால் கப்

உப்பு - தேவையான அளவு

தேங்காய்ப்பால் - 1 கப்

--------------------------------------------------

கீழ்கண்டவைகளை பொடிக்கவும்:

-------------------------------------------------

பட்டை - 4 துண்டுகள்,

கிராம்புகள் - 8

ஏலக்காய்கள் - 10

சோம்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக மெலிசாக அரிந்து கொள்ளவும்.

நெய்யை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

அதன் பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

மசாலாப்பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

காளான்களை நன்கு கழுவிச் சேர்த்து சிறிது உப்பு, தயிர், கொத்தமல்லி சேர்த்து அவை வேகும்வரை நன்கு வதக்கவும்.

தேங்காய்ப்பால், தண்ணீர் 13 கப், தேவையான உப்பு சேர்த்து கொதி வருமுன் அரிசியையும் கழுவிச்சேர்க்கவும்.

முக்கால்வாசி அரிசி வெந்து, தண்ணீர் சுண்டியதும் புலவை தம் மில் வைக்கவும்.

குறிப்புகள்: