காலிஃபிளவர் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப் (உதிரியாக வடித்தது)
காலிஃபிளவர் - பூக்களாக பிரித்தது 1 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 1
பிரியாணி இலை - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
நெய் - 1/4 தேக்கரண்டி
எண்னெய் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் உப்பும் போட்டு காலிஃப்ளவரையும் பச்சை பட்டாணியையும் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும், குழைய கூடாது.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கொத்தமல்லி இலை கொஞ்சம் எல்லாம் ஒன்றாக அரைத்து வைக்கவும்.
கடாயில் கொஞ்சம் நெய் + எண்னெய் விட்டு அதில் வாசனை மசாலாக்களை போட்டு பின் அரைத்த மசாலா விழுதையும் போட்டு, வெந்த காலிஃப்ளவரையும் போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை மணம் போன பின் அதில் வேகவைத்துள்ள சாததையும் போட்டு நன்றாக கலக்கவும்.
குறிப்புகள்:
இந்த ரைஸ் மைல்டாக இருப்பதால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
இதில் வெங்காயம், குடமிளகாய் நீளமாக வெட்டி சேர்க்கலாம்.