கார்ன் புலாவ் (1)
தேவையான பொருட்கள்:
வேக வைத்து உதிர்த்த சோளம் (அல்லது) ஸ்வீட் கார்ன் - 1 கப் (200 கிராம்) (விருப்பமான)
அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
நெய் - 1 தேக்கரண்டி
கல் உப்பு - 1 மேசைக்கரண்டி
-----------------------------
அரைக்க:-
------------------------
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிது
பூண்டு - 5 பல்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி தழை - 1/4 கட்டு
-----------------------------
தாளிக்க:-
-----------------
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - சிறிது
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவற்றை தனியாகவும் தக்காளியை தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைத்து வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டு சிவக்காமல் வறுத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
பொரிந்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது வேக வைத்த கார்ன் (ஸ்வீட் கார்ன்) சேர்த்து கிளறவும். அத்துடன் வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறவும்.
அரைத்த தக்காளியை ஊற்றி ஒன்றரை தம்ளர் தண்ணீரும் சேர்த்து கலக்கவும்.
உப்பு போட்டு நன்கு கலக்கி குக்கரை மூடி வெயிட் போட்டு 1 விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து 3 நிமிடம் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.
குறிப்புகள்:
இதனை தயிர் பச்சடியுடனோ சிக்கன் க்ரேவி தந்தூரியுடனோ சாப்பிட இன்னும் சுவை கூடும்.