காரட் சாதம்
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா பச்சரிசி – அரை கிலோ
பெரிய காரட் – இரண்டு
பச்சை மிளகாய் - மூன்று
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – பத்து கிராம்
உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
மல்லி இலை – ஒரு டேபிள் ஸ்பூன்
அதிகம் புளிப்பில்லாத மாங்காய் - ஒரு கீற்று
செய்முறை:
முதலில் பச்சரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்து ஒரு தட்டில் பரவலாகப் போட்டு ஆற வைக்கவும்.
காரட்டை நன்றாகக் கழுவி துருவி வைக்கவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை கால் அங்குலத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.
மாங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றவும்.
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து சிவந்ததும் கடுகு, முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் கிளறி கறிவேப்பிலை, உப்பு, காரட்டை சேர்த்து காரட் அரை வேக்காடு வேகும் வரை வதக்கவும்.
பின் சாதத்தை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, இறக்கி மாங்காய் துண்டுகளையும், மல்லி இலையும் தூவி ஐந்து நிமிடம் கழித்து கிளறிப் பரிமாறவும்.