காய்கறி பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி, பாசிப் பருப்பு - தலா 1 கப்

பட்டாணி - சிறிதளவு

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், மூன்றும் சேர்ந்து - 1 கப்

பெரிய.வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி - 1 துண்டு

பெருங்காயம் - 1 சிட்டிகை

நெய் - 1 டேபிள் ஸ்பூண்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு -

-------------------------------

தாளிக்க:

-------------------------------

மிளகு,சீரகம் தலா - 2 தேக்கரண்டி

பட்டை,லவங்கம், ஏலம் - தலா 2

முந்திரி - 10

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய், எண்ணெய் தலா - 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து மூன்றரை கப் தண்ணீர், நெய், பெருங்காயம், சீரகம் சேர்த்து வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும், உப்பு சேர்க்கவும்.பதமாக வெந்ததும் இறக்குங்கள்.

வெங்காயம், இஞ்சி, தக்காளி பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய், நெய்யை காய வைத்து தாளிக்க கூறப்பட்டுள்ள பொருட்களையும் (முந்திரியும்) இஞ்சியையும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை,காய்களைச் சேர்த்து வேகும் வரை வதக்குங்கள். கடைசியாக தக்காளி சேர்த்து சிறிது கிளறி பொங்கலை கொட்டி நன்றாக கிளறி இறக்குங்கள்.

குறிப்புகள்:

சாம்பார், சட்னியோடு பரிமாறுங்கள்.