காய்கறி குஸ்கா
தேவையான பொருட்கள்:
அரிசி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பட்டை, கிராம்பு
தயிர் - தாளிக்க
ரம்பை இலை - 1
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 4
காரட் - ஒன்று
காலி ஃப்ளவர் - ஒரு கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
பீன்ஸ் - பத்து
உருளைக்கிழங்கு - இரண்டு
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு - 70 கிராம்
தக்காளி - 3
செய்முறை:
இஞ்சி, பூண்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
காரட், காலி ஃப்ளவர், பச்சை பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி தயிர், இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி பட்டை, கிராம்பு, ரம்பை இலை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, காரட், காலி ஃப்ளவர், பச்சை பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
அதில் கடலைப்பருப்பு, அரிசி போட்டு தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு 2 விசில் விடவும்.