காபூல் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 1 கிலோ
உருளைக்கிழங்கு - 1 கிலோ
கேரட் - 3 (துருவிக்கவும்)
வெங்காயம் - 3 (பொடிதாக வெட்டவும்)
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
மல்லி இலை - 1 கப்
பட்டை - 2 இஞ்ச் அளவு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
எண்ணைய் அல்லது நெய் - 1 கப்
கேசரி பவுடர் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரியாணி அரிசியை அரைவேக்காடாக சமைத்துக்கவும். பாத்திரத்தில் நெய் அல்லது என்ணை காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய்போடவும். அதனுடன் வெட்டிய வெங்காயத்தை வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும்.அதில் உருளைக்கிழங்கு,துருவிய கேரட், மல்லி இலை, கேசரிப்பவுடர், உப்பு சேர்த்து லேசாக வேகவிடவும். பிறகு சமைத்த சோற்றில் பாதியை எடுத்துவிட்டு அதில் சமைத்த கலவையை பரவலாக கொட்டவும். இதன் மேல் எடுத்து வைத்த சோற்றை மேலாக கொட்டி நன்றாக மூடி 20 நிமிடம் மிகமிக குறைந்த தீயில் வேகவைக்கவும். கமகமக்கும் காபூல் ரைஸ் தயார்.
குறிப்புகள்:
விருப்பமுள்ளவர்கள் கறுப்பு மிளகு 1 மேசைக்கரண்டி சேர்த்துக்கலாம்.கலவையை கொட்டும் போது அதன் மேல் மிளகை தூவி விடலாம்.