காபுளி ரைஸ்
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
காரட் - ஒன்று
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
டோனிய பவுடர் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
அரிசியை சமைத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் காரட் இவற்றை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றை அரைத்து மிருதுவான விழுதாக்கிக் கொள்ளவும்.
அதன்பிறகு வெங்காயம், உருளைக்கிழங்கு, காரட் இவற்றை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் நெய்யை சேர்த்து, ஒரு பாத்திரத்தில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து கொஞ்சமாக வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், டோனியாதூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வதக்கிய காய்கறிகளை இதில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் சாதத்தை கொட்டி அதில் இந்த குழம்பை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். சுடாக பரிமாறவும்.