கவாபட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு குவளை

தக்காளி - ஒன்று

வெங்காயம் - ஒன்று

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 2

நெய் மற்றும் எண்ணெய் - 50 கிராம்

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

வினிகர் - அரை தேக்கரண்டி

மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - பாதி

உப்பு - தேவையான அளவு

முட்டை - ஒன்று

மல்லித் தழை - ஒரு சிறிய கட்டு

செய்முறை:

அரிசியை உதிர் உதிராக வடித்து வைக்கவும். பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும் வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்

முட்டையை உடைத்து ஊற்றி அடித்து பொரித்து வைக்கவும்

பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கி பாதியளவு வெந்ததும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டு விதை நீக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து வதங்கியதும் சோயா சாஸ், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

பின்னர் அதில் வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை தூவி பத்து நிமிடம் தம்மில் போடவும்

கடைசியில் பொரித்த முட்டையை சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: