கலவை பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
கடலை பருப்பு - ஒரு கைப்பிடி
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
பாசி பருப்பு - ஒரு கைப்பிடி
சிறிய வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 என்னம் (நீளமாக கீறியது)
இஞ்சி,பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3 என்னம்
பட்டை - 1 அங்குலம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணைய் - தே.அ
உப்பு - தே.அ
செய்முறை:
அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
எல்லா பருப்புகளையும் ஒன்று சேர்த்து கழுவி 40 நிமிடம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி சோம்பு,பட்டை,கிராம்பு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கியவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஊறவைத்த அரிசி,கடலை பருப்பு,துவரம் பருப்பு,பாசி பருப்பு வகைகளை போட்டு மஞ்சள்தூள் , மிளகாய் தூள் போட்டு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கலக்கு கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கும் சமயம் கொத்தமல்லி தழை போட்டு பறிமாறவும்.