கலர்புல் பருப்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

வெண்டக்காய், கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், காரட், அவரைக்காய், கோவக்காய், முள்ளங்கி - 250 கிராம்

பசலை கீரை - 1/2 கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

பட்டை - 1

லவங்கம் - 2

சோம்பு - சிறிதளவு

ஏலக்காய் - 1

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

------------------------------

தாளிக்க:

---------------------------------

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - சிறிது

பெருங்காயம் - சிறிது

கருவேப்பில்லை - சிறிது

நெய் - 3 தேக்கரண்டி

------------------------------

அலங்கரிக்க :

-----------------------------------

கொத்தமல்லி - கொஞ்சம்

பூந்தி - கொஞ்சம்

செய்முறை:

பருப்பு கழுவி ஊறவைக்கவும். காய்கறிகளை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2 நிமிடம் பிறகு காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி எல்லா பொடிகளையும் சேர்க்கவும். 5 நிமிடம் வதங்கியதும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறி குக்கரில் 4 கப் தண்ணீர்,கீரை,உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.

நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சாதத்தில் கொட்டவும்.

கொத்தமல்லி , பூந்தி தூவி ரைதவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

பூந்தி ரைதவுடன் பரிமாறினால் இன்னும் நன்றாக இருக்கும்.