கலர்புல் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

துவரம் பருப்பு - அரை கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - 2

வெண்டக்காய், கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், காரட், அவரைக்காய், கோவக்காய், முள்ளங்கி - 250 கிராம்

பசலை கீரை - அரை கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

பட்டை - ஒன்று

லவங்கம் - 2

சோம்பு - சிறிதளவு

ஏலக்காய் - ஒன்று

தனியா தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

-----------------------

தாளிக்க:

--------------------

கடுகு - அரை தேக்கரண்டி

வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது

நெய் - 3 தேக்கரண்டி

கொத்தமல்லி, பூந்தி - அலங்கரிக்க:

செய்முறை:

பருப்பை கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.

5 நிமிடம் வதங்கியதும் அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறி குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர், கீரை, உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.

நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சாதத்தில் கொட்டவும். கொத்தமல்லி, பூந்தி தூவி ரைத்தாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: