கம்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

கம்பை சுத்தம் செய்து லேசாக நீர் தெளித்து ரவை போல கொரகொரப்பாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை வைத்து கொதிக்க விடவும்.

அரைத்த கம்பை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.

கொதிக்கும் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கம்பை ஊற்றி கிளறவும்.

சில நிமிடங்களில் கம்பு வெந்துவிடும்.

இரவு இதேப் போல் செய்துவிட்டு மறுதினம் காலையில் பார்த்தால் படத்தில் இருப்பது போல் இருக்கும்.

குறிப்புகள்:

அதில் தயிர் கலந்து சாப்பிடலாம். வயிற்றிற்கு நல்ல குளிர்ச்சியை தரும். துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.