கப்சா ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

---------------------------------

கோழி வறுக்க:

------------------------------------

சிக்கன் - ஒரு கிலோ

மசாலா பொடிகள் - சீரகம், மல்லி தூள், குருமிளகுத் தூள் மூன்றும் அரை தேக்கரண்டி அளவு

இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் பொரிக்க (6 தேக்கரண்டி)

-------------------------------

சாதத்திற்கு:

---------------------------------

வெங்காயம் நீளமாக நறுக்கியது - 3

சிக்கன் ஸ்டாக் - 2 க்யூப்கள்

அரிசி - 4 கப் (6 கப் தண்ணீர்)

பட்டை - ஒரு இன்ச் துண்டு

ஏலக்காய் - 3

குடை மிளகாய் - 1/2 மிளகாயை சதுரமாக நறுக்கவும்

காய்ந்த எலுமிச்சைப்பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து உலையில் இடும் பொழுது வடிக்கவும்.

கோழியில் வறுக்க கொடுத்த மசாலாக்களை கலந்து 2 மணிநேரம் ஊறவைத்து பின் அதனை எண்ணெயில் முக்கால் பாகம் வேகும் அளவு பொரித்து எடுக்கவும்.

பிறகு அதே எண்ணெயில் ஏலக்காய், பட்டை போட்டு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து உடையும் வரை வதக்கி அதில் குடைமிளகாயும் சேர்த்து வதக்கவும்.

அதில் சிக்கன் ஸ்டாக் சேர்த்து 6 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து வடித்த அரிசியை போட்டு கொதித்ததும் தீயை குறைத்து 20 நிமிடம் மூடியிட்டு வேக விடவும்.

பின் அதில் பொரித்த சிக்கன் தூண்டுகளை போடவும். மேலும் 15 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.

குறிப்புகள்:

கடைசியில் 1/2 எலுமிச்சையை அரிசியில் பிழிந்து பரிமாறவும் .