கத்திரிக்காய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 4 கப்

கத்திரிக்காய் - கால் கிலோ

தக்காளி - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 2

மிளகாய் வற்றல் - 4

மிளகு - ஒரு தேக்கரண்டி

ஜீரகம் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

மல்லி - ஒரு தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 2

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் சிவப்புமிளகாய் மற்ற மசாலா பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். இவை எல்லாவற்றையும் நன்கு பொடித்து கொள்ளவும்.

கத்திரிகாயை நீள வாக்கில் நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

அது வதங்கியதும் அதனுடன் கத்திரிக்காயையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும்.

கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி கூழையும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.

உப்பு சேர்க்கவும். கலவை நன்கு கொதித்ததும் அரைத்த மசாலா பொடிகளை கிளறி இறக்கவும்.

இதை சூடாக இருக்கும் போதே ஆறிய சாதத்தில் போட்டு நன்கு கலந்து விட சுவையான கத்திரிக்காய் சாதம் தயார்.

குறிப்புகள்:

சாதத்தில் கலக்காமல் இந்த கத்திரிக்காய் மசாலாவை இட்லி, தோசை, தயிர் சாதத்திற்கு பக்க உணவாகவும் பயன் படுத்தலாம்.