கத்தரிக்காய் புலவு
0
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
கத்தரிக்காய் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - கால் தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பட்டாணி - 4 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் களைந்து கழுவித் தண்ணீரை வடித்து விடவும்.
விதையில்லாத கத்தரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், கசகசா, பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து பொன்னிரமானவுடன் கத்தரிக்காய் மற்றும் உப்பைச் சேர்க்கவும்.
அரிசியைக் கொட்டிச் சிறிய தீயில் வைத்து மூடிவிடவும். அவ்வப்போது கிளறி விட்டு அரிசி வெந்தபிறகு அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்.