கத்தரிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 250 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய் - தலா 1
சோம்பு - 1/4 தேக்கரண்டி
தனியா - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
எள் - 1 தேக்கரண்டி
கொப்பரை - 2 மேசைக்கரண்டி
கடுகு, கருவேப்பில்லை, உளுதம்ப்பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க
உதுரியாக வடித்த சாதம் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகம், வெந்தயம், பட்டை, ஏலக்காய், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய், எள் மற்றும் கொப்பரையை எண்ணையில்லாமல் பொன்னிறமாக வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிக்காயாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து வதக்கினால் தக்காளி சீக்கிரமே வதங்கி விடும்.
பிறகு கத்தரிக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
காய் நன்கு வதங்கியதும் அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
பொடி எல்லா காயிலும் பரவியதும் இறக்கி ஆறவைக்கவும்.
வடித்த சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி ஆறவைத்து இந்த கலவையை கொட்டி நன்கு பிரட்டவும்.
குறிப்புகள்:
விதையில்லாத நீளமான கத்தரிக்காயில் செய்தால் நன்றாக இருக்கும்.