கட்டி சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - ஒரு கப்

தேங்காய் - கால் மூடி

நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

காய்ந்த மிளகாய் - 3

பூண்டு பல் - 10

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

புளி - எலுமிச்சை அளவு

செய்முறை:

தேங்காயை மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். பூண்டை நறுக்கிக் கொள்ளவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கிய பூண்டு

காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்.

நன்கு பொரிந்ததும் அதில் தேங்காய் பால் அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அரிசியை அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டும் நேரம் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

பிறகு நன்கு தண்ணீர் சுண்டியதும் ஒரு மூடி போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 10 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: