கடாய் சாதம் (புளி)
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு, ஊற வைத்து கரைத்தது
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நசுக்கியது)
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
செய்முறை:
சாதம் உதிரியாக வடித்து வைக்கவும். (இரவு சாதம் இருந்தால் கெட்டி இல்லாமல் உதிரியாக்கவும்).
புளி தண்ணி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சாதத்தை நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (இரவு சாதம் என்றால் இரவே கலந்து வைத்து விடவும்)
கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சாபார் தூள், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் சாதத்தை கொட்டி கிளரவும். மிதமான தீயில் ஒரு 10 - 15 நிமிடம் கிளரவும்.
குறிப்புகள்:
உருளைக்கிழங்கு பொரியல், அப்பளத்துடன், நல்லா இருக்கும்.