கடலைப்பருப்பு நெய் சோறு
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 கப்
கடலைப்பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தயிர் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
நெய் + எண்ணெய் - அரை கப்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் - 3
கிராம்பு - 5
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 7 கப்
செய்முறை:
கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற விடவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைமிளகாய், மல்லித்தழையை போட்டு தாளித்து தயிரை ஊற்றி கிளறி விட்டு தண்ணீரை ஊற்றி அரிசியை களைந்து போட்டு அதனுடன் ஊறவைத்த பருப்பைப்போட்டு நன்கு குழையாமல் வேக விடவும்.