கஞ்சி சோறு (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்:
அரிசி - 50 மில்லி
நெய் - தாளிப்புக்கு
கருவேப்பிலை - சிறிது
கருவா - 1 துண்டு
ஏலம் - 2
வெங்காயம் - தாளிப்புக்கு
செய்முறை:
முதலில் அரிசியை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்து கடைந்துக்கொள்லவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கருவா, ஏலம்,போட்டு வெடித்ததும், வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
நல்ல சுவையும் மணமும் உள்ள கஞ்சி சோறு தயார். இதை 6 மாதம் முதல் எல்லா வயது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
குறிப்புகள்:
காய்ச்சல் அல்லது உடம்பு சரியில்லாத நேரத்தில் பெரியவர்களும் சாப்பிடலாம்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை சட்னி பெரியவர்களுக்கு செய்துக்கலாம்.
பெரியவர்களுக்கும், 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் செய்யும் போது தேங்காய் பால் சாதத்துக்கு தகுந்தது போல் ஊற்றி இறக்கினால் சுவை இன்னும் அதிகமாகும்.
அதாவது 1 கப் அரிசி என்றால் தேங்காய் பால் 1/2 கப் ஊற்றலாம்.