ஓவன் சிக்கின் ரைஸ்
தேவையான பொருட்கள்:
கோழிக்கால் - 1 கிலோ
பசுமதி அரிசி - 750 கிராம்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
குடைமிளகாய் - 1
தக்காளி - 2
தண்டூரிப் பவுடர் - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1-2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைப் போட்டு 3/4 பதமாக சாதம் வடித்து வைக்கவும். கோழிக்காலை தோல் நீக்கி ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும்.
தண்டூரிப் பவுடர், உப்பு சேர்த்து கோழித்துண்டுகளை பிரட்டி 30 நிமிடம் வைக்கவும்.
வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி உப்பு போட்டு வைக்கவும். ஓவனை சூடுப்படுத்தவும்.
ஓவன் ரேயில் பட்டர் தடவி கோழித்துண்டுகளை வைத்து ஓவனில் 200 F டிகிரியில் வைக்கவும்.
30 நிமிடத்தின் பின்பு கோழித்துண்டுகளை திருப்பி விடவும்.
10 நிமிடத்தின் பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை போடவும்.
பின்பும் 10 நிமிடத்தில் 2 கப் தண்ணீரில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கரைத்து விடவும்.
15 நிமிடத்தின் பின்பு சாதத்தைப் போட்டு கிளறி அதன் மேல் குடைமிளகாயை தூவி மீண்டும் வைக்கவும்.
10 நிமிடத்தின் பின்பு சாதத்தைக் கிளறி ஓவ் செய்யவும். 5 நிமிடத்தின் பின்பு வெளியே எடுக்கவும்.
சுவையான சிக்கின் ரைஸ் தயார்.
குறிப்புகள்:
இதை வெங்காய தயிர் பச்சடி, முட்டை சேர்த்து பரிமாறவும்.