ஒயிட் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
காளான் - 100 கிராம்
பேபி கார்ன் - 3- 4
வெள்ளை வெங்காயம் - 3
உப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை:
பாஸ்மதியை 1/2 மணி நேரம் ஊற வைத்து உதிர் உதிராக வடிக்கவும்
பேபி கார்னை வட்டமாக நறுக்கவும். காளானை சற்று பெரிய சதுரங்களாக நறுக்கவும்.
நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை, ரம்பைஇலை, பிரிஞ்சி இலையுடன் சேர்த்து அதிகம் சிவந்து விடாமல் வதக்கவும்.
அவித்த பேபி கார்ன், காளான் இத்துடன் சேர்த்துக் கிளறவும்.
கடைசியாக வடித்த சாதத்தை சேர்த்து பிரட்டி, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து, 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.
காரம் வேண்டுவோர் வெள்ளைமிளகை பொடித்துப் போடலாம். அல்லது வெங்காயத்தை வதக்கும் போது இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கலாம்.
தம்மில் போடும் பொழுது சிறிது நெய் தெளிக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு மட்டன் குருமா, வெஜ் குருமா சுவையாக இருக்கும்.