ஐயங்கார் புளியோதரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கப்

தண்ணீர் - இரண்டரை கப்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மிளகாய் வற்றல் - 8

மல்லிவிதை - 2 தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

வெல்லம் - நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

புளியை சிறிது தண்ணீர் விட்டு உப்பும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தையும், மல்லியையும் போட்டு லேசாக வறுத்து எடுத்து பொடியாய் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.

பிறகு பெருங்காயத்தை போட்டு, மிளகாய் வற்றலையும் கிள்ளிப் போட்டு சிவக்க வறுத்து அதன்பின் ஊற வைத்துள்ள புளியை கெட்டியாய் கரைத்து ஊற்ற வேண்டும்.

புளி நன்றாகக் கொதித்து கெட்டியானவுடன் மஞ்சள் பொடியையும் அதில் போடவும்.

பிறகு புளிக்காய்ச்சலை சாதத்தில் ஊற்றி, கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் மல்லி, வெந்தயப் பொடியை போட்டு கிளறிக்கொள்ளவும்.

குறிப்புகள்: