எள்ளோதரை
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு டம்ளர் ( 200 கிராம்)
-----------------------
பொடி செய்ய:
--------------------------
எள் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
பெருங்காயம் - ஒரு சிறுத் துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
-------------------------
தாளிக்க:
------------------------
நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்க வேண்டும்.
எள்ளை கல் இல்லாமல் களைந்து வறுத்து எடுத்து விட்டு அதே வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மீதி உள்ளதையும் வறுத்து எள்ளையும் சேர்த்து பொடி செய்து சாதத்தில் தூவி நன்கு கிளற வேண்டும்.
பிறகு மீதி இருக்கும் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கிளறி இறக்க வேண்டும். எள் மணத்தோடு இந்த சாதம் சுவை தூக்கலாக இருக்கும்.