எள்ளு சாதம் (3)
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு கப் (200 கிராம் அரிசியின் சாதம்)
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
எள் - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 5
மிளகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சாதத்தை பொல, பொலவென்று (ஒரு கப்க்கு 2 கப் வீதம் தண்ணீர் விட்டு) வடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் மிளகாய், மிளகு, எள், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய், நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி சாதத்தை போட்டு கிளறி, உப்புத்தூள், பொடித்த பொடியை தூவி, எலுமிச்சைச்சாறு விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.