எள்ளு சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

வெள்ளை எள்ளு - 3 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 4

உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கு

கடுகு - 1/4 டீஸ்பூன்

முந்திரி - 10

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

அரிசியை உதிரியாக வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும்.

சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், உளுந்து இரண்டினையும் சிவக்க வறுக்கவும்.

ஆறவிட்டு பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் மீதமிருக்கும் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சாதம், பொடிவகைகள், உப்பு சேர்த்து கலந்து, முந்திரி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெரைட்டி ரைஸ் செய்யும் போது இந்த எள்ளு சாதம் ஒன்றும் செய்யலாம்