எள்ளு சாதம்
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - 1/4 கப்
துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
புளி - சிறிது [1/2 மேஜைக்கரண்டி அளவு]
அரிசி - 1 கப்
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
-------------------------
தாளிக்க:
---------------------
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயம் - சிறிது
மிளகாய் வற்றல் - 1
செய்முறை:
அரிசியை கழுவி சாதம் வடிக்கவும். இதில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.
வெள்ளை எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.
1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவும்.
மிக்ஸியில் எள், மிளகாய், தேங்காய் துருவல், புளி அனைத்தையும் தேவையான அளவு நீர் விட்டு விழுதாக் அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் சாதத்தில் சேர்த்து வேர்கடலையும் சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.