எளிய புதினா புலவு
தேவையான பொருட்கள்:
புதினா - ஒரு கட்டு
\கொத்துமல்லி - அரை கட்டு
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 4
வெங்காயம் - 2
பட்டாணி - கால் கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
செய்முறை:
புதினா, கொத்தமல்லியை கழுவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து தனியாக அரைத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு தாளித்து
நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பட்டாணி
அரைத்த மல்லி, புதினா விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி விசில் வந்ததும் சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.
குறிப்புகள்:
வெந்ததும் இறக்கி ரைத்தாவுடன் பரிமாறவும். இந்த வகை புலவு நன்கு பசியை தூண்ட கூடியது.